Site icon Tamil News

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் உறவு: ஜேர்மனி, பிரித்தானியா இடையே இருதரப்பு ஒப்பந்தம்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரிட்டிஷ் உறவுகளை மீட்டமைப்பதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரையிலான பிரச்சினைகளை உள்ளடக்கிய “லட்சியமான” ஒப்பந்தத்தில் பணியாற்ற பிரிட்டன் மற்றும் ஜெர்மனியின் தலைவர்கள் புதன்கிழமை பேர்லினில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டனர்.

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் முயற்சிக்கிறார்.

முந்தையை அரசால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை சரி செய்ய முயற்சிக்கவேண்டும் என்று கூறியுள்ள ஸ்டார்மர், தான் அதற்காகத்தான் ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் செல்வதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்

அத்துடன், சட்டவிரோத புலம்பெயர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version