Site icon Tamil News

ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக்குத்து தாக்குதல்

மெல்போர்னில் உள்ள ஹை பாயின்ட் வணிக வளாகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பதின்ம வயதுடைய ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு வாரத்திற்குள் வணிக வளாகத்தில் நடந்த இரண்டாவது கத்திக்குத்து இது என்று நம்பப்படுகிறது.

நேற்று மாலை 6.10 மணியளவில் வணிக வளாகத்தினுள் உள்ள திரையரங்கு வளாகத்திற்கு அருகில் 6 ஆண்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செயின்ட் அல்பான்ஸைச் சேர்ந்த 18 வயது இளைஞன் கத்தியால் குத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் 17 மற்றும் 18 வயதுடைய மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேண்டுமென்றே பலத்த காயத்தை ஏற்படுத்தியமை, ஆயுதத்தால் தாக்கியமை மற்றும் ஆயுதம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் 17 வயதுடையவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவர் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஏனைய இரு இளைஞர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என பொலிஸார் கருதுகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இந்த வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் ஏற்பட்ட சண்டையில் 19 வயது இளைஞர் படுகாயங்களுடன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version