Site icon Tamil News

T20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி படைத்த மோசமான சாதனை

இவ்வருட 20-20 உலகக் கோப்பையில் இலங்கை அணி மோசமான தோல்விகளுடன் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது, 20-20 உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷுக்கு எதிராக தோல்வி அடைந்தது இதுவே முதல் தடவை ஆகும் .

முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 77 ரன்களுக்கு அனைத்து விக்கெடுக்களையும் இழந்தது , இலங்கை 20-20 வரலாற்றில் பெற்றுக்கொண்ட குறைந்த ஸ்கோராக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது .

அதேநேரம் 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி முதல் சுற்றிலேயே வெளியேறும் முதல் தடவை இவ்வருட உலகக் கிண்ணப் போட்டிகள் ஆகும் .

Exit mobile version