Site icon Tamil News

தருஷிக்கு தொலைபேசியில் வாழ்த்திய ஜனாதிபதி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் அழைப்பு மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

தருஷி கருணாரத்னவுடனான தொலைபேசி உரையாடலில், வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், இந்த வெற்றியால் முழு தேசமும் பெருமிதம் கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

ஹாங்சோவில் புதன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் 18 வயது சிறுமி வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் இலங்கை கிரிக்கெட் வாரியம், அவருக்கு 10 மில்லியன் ரூபாயை ($31,000) பரிசாக வழங்குவதாகக் கூறியது.

2002ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் போட்டிகளில் இலங்கை அணி இரண்டில் வெற்றி பெற்றதன் பின்னர் கருணாரத்னாவின் தங்கம் இலங்கையின் முதல் தங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version