Site icon Tamil News

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 3.5 பில்லியனாக அதிகரிப்பு!

இலங்கையின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஜுன் மாதத்தில் 3.5 பில்லியன் அதிகரித்துள்ளது.

இதில் சீன மக்கள் வங்கியின் இடமாற்று வசதியும் அடங்கும் என்று இலங்கை மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.

உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் பணப்புழக்க நிலைமைகள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022 இன் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2023 இன் முதல் பாதியில் சுற்றுலா மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்கள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கப் பத்திரச் சந்தையில் நிகர அந்நிய முதலீட்டு வரவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.  மேலும், உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நிய செலாவணியை குவிக்க முடிந்ததாக மத்திய வங்கி கூறியது.

அதன்படி, மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு ஜூன் 2023 இன் இறுதியில் சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version