Site icon Tamil News

இலங்கையில் அதிக உணவை வீணடிக்கும் நகரம் பற்றிய வெளியான தகவல்

இலங்கையில் அதிகளவு உணவை வீணடிக்கும் நகரமாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அவர்கள் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்காக 16 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கை 6 இலட்சம். கொழும்பு நகருக்கு நாளாந்தம் 5 இலட்சம் பேர் வருவதாகக் கூறப்படுகிறது.

அந்த மக்கள் உண்ணும் உணவு வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் 128 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் தொடர்பாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் தரவுகளை மேற்கோள்காட்டி அவர் இதனைத் தெரிவித்தார்.

உணவு அல்லாத பொருட்களின் விலை மட்டம் 87 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version