Site icon Tamil News

IMF இன் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  3வது தவணை தொடர்பான இரண்டாவது மீளாய்வை மார்ச் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

IMF பிரதிநிதிகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களில் இரண்டாவது மதிப்பாய்வை நடத்துவார்கள் என்று நம்பப்படுகிறது என்று நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் ஏனைய உடன்படிக்கைகளை நிறைவு செய்வது டிசம்பர் 31 ஆம் திகதி வரை மீளாய்வு செய்யப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் ஊழியர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை பெற்றுக்கொள்ளப்படும் என நம்பிக்கை வெளியிட்டதாக இராஜாங்க அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

Exit mobile version