Site icon Tamil News

முதல் காலாண்டில் இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சி

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11.5 சதவீத எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 முதல் காலாண்டில் 19,400 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 14,187 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க டொலரின் மதிப்பு ரூபாய்க்கு எதிராக இன்று மீண்டும் உயர்ந்தது. பல வங்கிகளில் டொலரின் விற்பனை மதிப்பு இன்று 330 என்ற எல்லையை எட்டியுள்ளது.

இதனால் கடந்த மார்ச் 21ம் திகதி பின்னர் முதல் முறையாக அமெரிக்க டொலரின் மதிப்பு 330ஐ எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version