Site icon Tamil News

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவர் தாம் பணிபுரியும் வீட்டில் குடியிருப்பவர்களால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதால், தம்மை விரைவில் இலங்கைக்கு அழைத்துவருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹொரவ்பொத்தானை – வில்வாவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய குறித்த பெண், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார்.

எனினும் தான் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர்கள் தன்னை பல்வேறு விதங்களில் சித்திரவதை செய்வதாக தொலைபேசியில் தனது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார் என இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version