Site icon Tamil News

அவுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் மெல்பேர்னில் தீக்குளித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

23 வயதான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கடல் மார்க்கமாக பெற்றோருடன் சட்டவிரோதமாக  அவுஸ்ஸ்திரேலியா வந்துள்ளார்.

தற்காலிக விசாவில் சுமார் 11 வருடங்களாக நாட்டில் இருந்த அவர், இதற்கு முன்னர் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டது.

மனோ யோகலிங்கம் என்ற இளைஞன் தனது வீசா பிரச்சினை காரணமாக மிகவும் கவலையடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு (27) அவர் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விக்டோரியா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் இன்று (28) உயிரிழந்துள்ளார்.

அவுஸ்ஸ்திரேலிய மத்திய அரசின் “அகதிகள் தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைக்கு” எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அவுஸ்ஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version