பதவியை இராஜினாமா செய்தார் இலங்கை சபாநாயகர் அசோக ரங்வாலா!
இலங்கை சபாநாயகர் அசோக ரங்வாலா அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தனது கல்வித் தகுதி குறித்து சமூகத்தில் பிரச்சனை எழுந்தாலும், பொய்யான எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும் அவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
ஆனால், கல்வித் தகுதியை உறுதிப்படுத்தத் தேவையான சில ஆவணங்கள் தன்னிடம் இல்லாததால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அந்த ஆவணங்களை உடனடியாக சமர்பிப்பது கடினம் என்று அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்ட ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து இது தொடர்பான கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும், விரைவில் அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்த முடியாது எனவும், அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வைத்து மக்களை சங்கடப்படுத்த முடியாது எனவும் அசோக ரன்வல தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.