Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: துபாய்க்கு பயணமாகியுள்ள நாமலின் குடும்ப உறவினர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபகஸ்வின் மாமியார், இரு பிள்ளைகள் , இரு பணிப்பெண்கள் மற்றும் உறவினரான பெண் ஆகியோர் இன்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு பயணமாகியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் அறுவரும் இன்று (20) காலை 10.05 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-651 விமானத்தின் ஊடாக துபாய்க்கு பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள Silk Route முனையத்தின் வசதிகளையும் பெற்றுக்கொண்ட இவர்கள் இந்த விமான சேவைக்காக ஒருவருக்கு தலா 52 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version