Site icon Tamil News

தாய்லாந்து எல்லையில் போலி மலேசிய கடவுச்சீட்டுடன் இலங்கையர் கைது

மலேசியாவின் கெடா குடிவரவுத் திணைக்களம், மலேசியா தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

21 வயதான வெளிநாட்டவர் ‘ராஜா டேனி டெனிஸ்’ என்ற பெயர் கொண்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது, ​​குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக அதன் இயக்குனர் முகமட் ரிட்சுவான் முகமட் ஜைன் தெரிவித்தார்.

மலேசிய குடிமகனாக ஆள்மாறாட்டம் செய்து தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது அந்த நபர் கைது செய்யப்பட்டார். எனினும், சோதனையில் அவரது பாஸ்போர்ட் செல்லாது என்று தெரியவந்ததையடுத்து, அவர் உடனடியாக தடுத்து வைக்கப்பட்டார்,” என்று அவர் தெரிவித்தார்.

செல்லுபடியாகும் பயண ஆவணம் இன்றி நாட்டிற்குள் நுழைந்து தங்கியிருந்தமைக்காக சந்தேகநபர் குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முகமட் ரிட்சுவான் குறிப்பிட்டார்.

“கெடா குடிவரவுத் துறைக்கும் எங்கள் தாய்லாந்து சகாக்களுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் விளைவாக கைது செய்யப்பட்டது. இந்த போலி பாஸ்போர்ட்டின் பின்னணியில் உள்ள திட்டம் குறித்து முழு விசாரணை நடத்துவோம்,” என்று தெரிவித்தார்.

Exit mobile version