Site icon Tamil News

இலங்கை – ஹாலிஎல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்து இரு பெண்கள் உயிரிழப்பு!

இலங்கை, பதுளை – ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

21 வயதுடைய இரு பெண்களும்,  பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், மருத்துவர்களின் முயற்சிகளை மீறி, சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version