Site icon Tamil News

ஐ.நாவின் சமூக சபைக்கு தெரிவான இலங்கை!

ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு (ECOSOC) இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தனது 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு 2025 ஜனவரி 1 முதல் மூன்று வருட பதவிக் காலம் இருக்கும்.

இலங்கை பெற்ற இந்த வாக்குகள் பிராந்தியத்தில் ஒரு நாடு பெற்ற இரண்டாவது அதிக வாக்குகள் எண்ணிக்கையாக மாறியது.

இலங்கை இதற்கு முன்னர் 1985-1989 மற்றும் 2006-2008 வரை ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version