Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தபால் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இலங்கை 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 வாக்காளர்கள் தபால் மூல வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவது தொடர்பான பத்திரங்கள் எதிர்வரும் 26ஆம் திகதி உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத்  தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் மூன்று நாட்களுக்கு தபால் வாக்குகளை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி செப்டம்பர் 4ம் திகதி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் போலீஸ் அலுவலகங்களில் தபால் ஓட்டு பதிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.

Exit mobile version