Site icon Tamil News

இலங்கை : எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்த உத்தரவு!

நாட்டில் போதிய எரிபொருள் இருப்பு இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் உரிய அதிகாரிகளுடன் இன்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் போதிய எரிபொருள் இருப்புக்களை பேண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

வருடத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு திறமையாக செயற்படுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

800 பேருக்கு இந்திய உதவி மூலம் கிடைத்துள்ள சோலார் பேனல்களை விரைவில் வழங்குவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, மின்சக்தி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட வீதி வரைபடத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். .

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் வெளிநாட்டுக் கடன்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மின்சக்தி அமைச்சு விளக்கியுள்ளது.

இதன்படி மூன்று மாதங்களுக்குள் வெளிநாட்டு உதவியில் அமுல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதுடன், கிராமத்திற்கு பணம் செல்லும் முறையை விரைவாக ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Exit mobile version