Site icon Tamil News

இலங்கை : தெஹிவளையில் உள்ள கடன் வழங்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தெஹிவளையில் உள்ள இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றை சுற்றிவளைத்து, ஐந்து சீனப் பிரஜைகளையும் ஒரு இலங்கையரையும் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 6 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த நிறுவனத்திற்குச் சொந்தமான 8 கணனிகள், 13 மடிக்கணினி வகை கணனிகள் மற்றும் 49 கையடக்கத் தொலைபேசிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (15) ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் போது, ​​கடனாளியின் மொபைல் போனின் தனிப்பட்ட தகவல்களை, OPT எண் மூலம் பெற்று, சமூகத்தில் சில தகவல்களை பரப்பி மிரட்டி, உரிய பணத்தை பெற்றுக் கொண்டது, போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகள் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனிப் புலனாய்வுப் பிரிவினருக்கோ தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version