Site icon Tamil News

ஜனாதிபதி ரணிலின் விசேட உத்தரவு

அஸ்வெசும திட்டத்தை எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் எடுக்கப்படும் நடவடிக்கை தகுதியானவர்கள் எவரையும் கைவிடாத வகையில் காணப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் நியதிகளுக்கு அமைய செயற்படுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் பொது மக்களுக்கான கொடுப்பனவு திட்டங்களான முதியோர், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பெயர் விபரங்கள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.

‘அஸ்வெசும’ சமூக நலன்புரித் திட்டதில் பதிவு செய்துக்கொள்ள முடியாவிட்டாலும் இந்த திட்டத்தில், இணைந்து கொள்ள விரும்புவோருக்கு வருடாந்தம் வாய்ப்பளிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், அஸ்வெசும திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் மீண்டும் வாய்ப்பளிக்கப்படும்.

அத்துடன், தற்போது வெளியிடப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் பெயர் பட்டியலில், பெயர் இல்லாதவர்கள் அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version