Site icon Tamil News

இலங்கையில் தங்கியிருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு – அதிகரிக்கும் கட்டணம்

விசா காலத்தை மீறி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் அபராதத் தொகையை திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

அதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

14 நாட்களுக்கு மேல் தங்கியதற்கான அபராதம் 250 டொலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் அபராதம் 500 டொலர்களாகவும் திருத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அசல் விசாவின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் இலங்கையை விட்டு வெளியேறுபவர்கள், புதிய வர்த்தமானியின்படி, எந்தவொரு அபராதமும் செலுத்தாமல், பொருந்தக்கூடிய விசா கட்டணத்தை செலுத்தி நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version