Site icon Tamil News

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பில் வெளிநாட்டு தேசிய அடையாளங்களை அனுமதியின்றி பகிரங்கமாக வெளிக்காட்டுவது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நாடுகளின் அடையாளத்தை கொண்ட ஆடைகளை அணிவதும் குற்றம் என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மீறினால் சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் S$500 வரை அபராதம் விதிக்கப்படும். அனைத்து வெளிநாட்டு தேசிய சின்னங்களுக்கும் அதாவது அனைத்து வட்டாரங்களில் கொடிகள், பதாகைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.

மேலும் அத்தகைய அடையாளங்களை கொண்ட ஆடைகளை அணியும் பயணிகளுக்கும் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.

“நடந்துகொண்டிருக்கும் மோதல் தொடர்பான சின்னங்களுடன் கூடிய ஆடைகள் மற்றும் சாதனங்கள் ஆன்லைனில் விற்கப்படுகின்றன.”

மேலும் அவை பொதுமக்களால் அணியப்படுவது குறித்து அறிந்திருப்பதாக MHA கூறியது.

Exit mobile version