Site icon Tamil News

ஜெர்மனியில் அகதிகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

ஜெர்மனி நாட்டில் அகதிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜெர்மன் அரசாங்கமானது ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஜெர்மன் நாடாளுமன்றமானது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஹொல்டாவா மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளை உள்ளடக்கியுள்ளது.

அதாவது இந்த நாடுகளில் இருந்து வருகின்றவர்கள் ஜெர்மன் நாட்டில் அகதி விண்ணப்பம் கோரினாலும் இவர்களுடைய அகதி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது.

இந்நிலையில் தற்பொழுது ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சிகளின் பிரதான அங்க கட்சியான FDP கட்சியானது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் மேலும் சில நாடுகளை சேர்க்க வேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது.

மாக்ரட் ஷாட்ஸ் என்று சொல்லப்படுகின்ற அல்ஜிரியா,ட்றுனேசியா மற்றும் மொரோகோ போன்ற நாடுகளில் இருந்து வருகின்ற அகதிகளுக்கு ஜெர்மன் நாட்டிலே அகதி அந்தஸ்தை வழங்க கூடாது என்று பிரதான கூட்டு கட்சியானது அழுத்தத்தை கொடுத்து வருகின்றது.

இந்நிலையில் FDP கட்சியுடைய வேண்டுதலுக்கு ஜெர்மனியின் வெளிநாட்டு அமைச்சரும் பசுமை கட்சியுடைய முக்கிய அரசியல் பிரமுகருமான அணல்டெனா பேர்பக் அவர்கள் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆளும் கூட்டு கட்சியுடைய மற்றுமொரு பிரதான பங்காளி கட்சியான SPD கட்சியிடையே இவ்வாறான வேண்டுதலுக்கு சில எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version