Site icon Tamil News

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஜூலை மாதம் இறுதிவரை இடம்பெறும் என்பதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடத்தப்பட வேண்டும் எனவும், அது செப்டெம்பர் மாத இறுதியில் அல்லது ஒக்டோபர் மாத தொடக்கத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறும், அவ்வாறு நடத்தினால் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

Exit mobile version