Site icon Tamil News

இலங்கை பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு!

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் (லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை) வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இதனால், அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸ் தொற்று பரவல் தற்போது பாடசாலைகள், தனியார் வகுப்புகளில் அதிகம் பரவி வருகின்றது.

எனவே, தமது பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருப்பின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமது பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால் பெற்றோர் உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தற்போது ஏற்படக்கூடிய காய்ச்சல் ஏனையவர்களிடமும் விரைவில் பரவக்கூடிய தன்மையைக் கொண்டதனால், வீட்டில் உள்ள ஏனையவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்ததாக இருக்கும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இன்புளுவென்சா வைரஸ் தொற்று கிட்டத்தட்ட கொவிட் தொற்றை போன்றது, அது மக்களிடையே விரைவாக பரவக்கூடியது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version