Site icon Tamil News

பலூன் அச்சுறுத்தலை தொடர்ந்து எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் தென்கொரியா

இரு கொரியாக்களையும் வடமேற்கு தீவையும் பிரிக்கும் எல்லையில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்கப் போவதாக தென்கொரிய ராணுவம் செவ்வாய்க்கிழமை (ஜீன் 4) தெரிவித்தது.

முன்னதாக வடகொரியாவுடனான ராணுவ ஒப்பந்தத்தை இடைக்காலமாக ரத்து செய்வதாக தென்கொரியா அறிவித்தது. அந்நாட்டின் அதிபர் யூன் சுக்-இயோல் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

வடகொரியா குப்பை நிறைந்த ஆயிரக்கணக்கான பலூன்களை தென்கொரியாவுக்கு அனுப்பி வருவதைத் தொடர்ந்து ராணுவ ஒப்பந்தத்தை தென்கொரியா நிறுத்திவைத்துள்ளது.

“வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு பதிலடியாக மக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தென்கொரிய ராணுவம் தெளிவுபடுத்துகிறது,” என்று பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் அவசர விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.வடகொரியாவின் பெரிய அளவிலான குப்பை நிறைந்த பலூனால் எங்களுடைய மக்களின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது. சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

பியோங்யாங் 13,600 கிலோ குப்பைகளை 3,500 பலூன்களைப் பயன்படுத்தி அனுப்பியிருப்பதாக ஜூன் 2ஆம் திகதி தெரிவித்தது.

இதையடுத்து வடகொரியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சியோல் சூளுரைத்தது. வடகொரியாவை நோக்கி பெரிய ஒலிபெருக்கியில் பிரசாரத்தைத் தொடங்குவது அவற்றில் ஒன்று.

ஒன்று மற்றதற்கு எதிரான ராணுவப் பதற்றம் மற்றும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க இரு நாடுகளும் ராணுவ ஒப்பந்தம் செய்துகொண்டன.2018ல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் இரு கொரியாக்களுக்கு இடையே அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.ஆனால் அந்த உடன்பாட்டுக்கு கட்டுப்பட போவதில்லை என்று 2023ல் பியோங்யாங் அறிவித்தது.

Exit mobile version