Site icon Tamil News

தென் கொரியாவில் மூடப்படும் பாடசாலைகள் – படிக்க சென்ற 82 வயது மூதாட்டி

தென் கொரியாவில் கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 3,800 ஆரம்ப பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

படிப்பதற்கு மாணவர்கள் இல்லை மற்றும் மிகக் குறைவான பிறப்பு விகிதம் அதற்குக் காரணமாகியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது..

இந்நிலையில், ஜியோன்கி (Gyeonggi) மாநிலத்தில் உள்ள கோசுங் (Gosung) ஆரம்ப பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்க்கப் புதிய உத்தியை நாடியது.

புதிய யோசனையைக் கையில் எடுத்தார் பாடசாலை முதல்வர். எழுதப் படிக்கத் தெரியாத பாட்டிகளுக்குப் பாடம் சொல்லித்தர அவர் முடிவெடுத்தார்.

2021ஆம் ஆண்டில் 4 பாட்டிகள் பாடசாலையில் சேர்ந்தனர். அவர்கள் இளம் மாணவர்களுடன் ஒரே வகுப்பில் பாடம் கற்கத் தொடங்கினர்.

அவர்களில் ஒருவர் யூன் ஓக் ஜா (Yoon Ok Ja) என்பவராகும். சிறுவயதில் அவர் பாடசாலைக்குச் செல்லவில்லை.

கொரியப் போர் தொடங்கிய காலத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட சிரமங்கள் அவருக்குத் தடையாக இருந்தன.

இப்போது 82 வயதில் அவருக்குப் படிக்க ஒரு வாய்ப்பாகியுள்ளது. வயது ஒரு தடையல்ல என பாட்டி கூறியுள்ளார்.

எதையும் படிக்கலாம், எதையும் எழுதலாம் என்பதில் பாட்டிக்கு மட்டற்ற மகிழ்ச்சி என செய்தி வெளியாகியுள்ளது.

Exit mobile version