Site icon Tamil News

தென் கொரியாவில் வெளிநாட்டவர்கள் 2 ஆண்டுகள் தங்கிச் செல்ல அனுமதிக்கும் விசா அறிமுகம்

தென் கொரியா வேலை விடுமுறையில் நாட்டிற்கு வரும் வெளிநாட்டினருக்கு புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

தென்கொரிய அரசாங்கம் ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய டிஜிட்டல் நாடோடி விசாவை வழங்குகின்றது.

சொந்த நாட்டில் வேலையில் நீடிக்கும் வெளிநாட்டினர் தென்கொரியாவில் 2 ஆண்டுகள் வரை தங்கியிருக்க இந்தப் புதிய விசா உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் வேறு இடத்திலிருந்து வேலைசெய்யும் போக்கு அதிகரித்துவருகின்றது.

இந்த நிலையில், தென்கொரியாவில் தங்கி அவ்வாறு சொந்த நாட்டில் வேலை செய்ய விரும்புவோர்க்கு உதவ, இந்தப் புதிய விசாவை அறிமுகப்படுத்த முடிவுசெய்ததாகத் தென்கொரிய நீதி அமைச்சு தெரிவித்தது.

தற்போது இத்தகைய வெளிநாட்டினர் சுற்றுப்பயண விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அல்லது அவர்கள் 90 நாள்களுக்குக் குறைவான காலத்திற்கே தென்கொரியாவில் தங்கி சொந்த நாட்டில் வேலை பார்க்கலாம் என்பதை அமைச்சு எடுத்துரைத்தது.

ஆண்டுக்கு 84.96 மில்லியன் வோனுக்கு ( 86,700 டொலர்) மேல் வருமானம் ஈட்டுவோர் உரிய ஆவணங்களுடன் தங்கள் நாட்டில் உள்ள தென்கொரியத் தூதரகத்தில் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version