Site icon Tamil News

30 ஆண்டு கால ஆதிக்கத்தை இழந்த தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்

தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) கட்சி சுமார் 30 ஆண்டுகளாக இருந்து வந்த பேராதரவை இழந்துள்ளது.

சென்ற வாரம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கப் பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ‘அப்பார்த்தைட்’ என்றழைக்கப்படும் இனபேதக் கொள்கைப் பிரச்சினையிலிருந்து மீட்ட ஏஎன்சி 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 57.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.

இனி அக்கட்சி மற்ற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியைத்தான் அமைக்க முடியும்.ANC இதுவரை அந்த நிலை ஏற்பட்டதில்லை.

‘நான் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும்,” என்று ANC தலைவரும் தென்னாப்பிரிக்காவின் சுரங்கங்கள், எரிசக்தி அமைச்சருமான குவெடெ மன்டா‌‌ஷெ கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து சொன்னார். அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறியதாக தென்னாப்பிரிக்க ஒலிபரப்பு நிலையம் தெரிவித்தது.

மே மாதம் 29ஆம் திகதின்று தென்னாப்பிரிக்கப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. வாக்குகளை எண்ணும் நடவடிக்கை சனிக்கிழமையனறு (ஜூன் 1) கிட்டத்தட்ட நிறைவடைந்தது.

Exit mobile version