Tamil News

விருதுகளை அள்ளிய சூரியின் “கொட்டுக்காளி” ரிலீசுக்கு ரெடியானது…

நடிகர் சிவகார்த்திகேயன், சூரியை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள கொட்டுக்காளி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற கொட்டுக்காளி திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த விடுதலை பார்ட் 1 மற்றும் கருடன் ஆகிய 2 படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து சர்வதேச அரங்கில் பல்வேறு பாராட்டுக்களை குவித்த, கொட்டுக்காளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும், இப்படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், மூட நம்பிக்கை பற்றயும், ஆணாதிக்கம் பற்றியும் மற்றும் மனித உணர்வுகளை எடுத்துரைக்கும் விதமாக இப்படம் உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதமே இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில்… இந்த ஆண்டு பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து பல்வேறு விருது விழாக்களில் இப்படம் கலந்து கொண்டதால், ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version