Site icon Tamil News

தெரசா மேவின் ஆட்சிகாலத்தில் பிரித்தானியாவில் நடந்த சில கசப்பான உண்மைகள்!

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரசா மே, தான் ஆட்சியில் இருந்தபோது விட்ட தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ITVயின் ஆவணப்படத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், தான் ஆட்சியில் இருந்தபோது அரசாங்கத்தில் இடம்பெற்ற சில கசப்பான விடயங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,  சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பான தனது “விரோத சூழல்” கொள்கையில் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

விண்ட்ரஷ் தலைமுறை உட்பட சட்டப்பூர்வ குடியேறியவர்களுக்கு அவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளை தான் கணிக்கவில்லை என்றும்  கூறியுள்ளார்.

2013 ஆம் ஆண்டில் உள்துறை அலுவலகம் வழங்கிய வேன்களில் வீட்டிற்கு செல்லுங்கள், அல்லது கைது செய்யப்படுவீர்கள் என எழுதியது தவறு என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேபோல் 2017 தீ விபத்துக்குப் பிறகு, கிரென்ஃபெல் டவரில் உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்திருக்க வேண்டும் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன்போது கடந்த 2018 ஆம் ஆண்டு வின்ட்ரஷ் ஊழல் தொடர்பில் கரீபியன் தலைவர்களிடம் அவர் மன்னிப்பு கோரினார்.

தெராசா மே உள்துறை செயலாளராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட குடியேற்ற கொள்கைகள்  1950கள் மற்றும் 1960களில் கரீபியனில் இருந்து வந்த விண்ட்ரஷ் குடியேறியவர்களுக்கு  கடுமையான அநீதியை” ஏற்படுத்தியது என்று சமத்துவ கண்காணிப்பு அமைப்பு கூறியது.

அதேபோல் அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் பற்றி கருத்து வெளியிட்ட அவர் அவர் கணிக்க முடியாதவர் எனக் கூறியுள்ளார். அவ்வாறன தலைவர்களுடன் கடமையாற்றுவது கடினம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version