Site icon Tamil News

ராணுவ வீரர்கள் பற்றாக்குறை: நிரந்தர குடியிருப்பளர்களையும் சேர்த்துக்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்‌திரேலியாவில் ராணுவ வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் நிரந்தர குடியிருப்பாளர்களை அது தனது ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள இருக்கிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக நியூசிலாந்து, அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆஸ்திரேலிய நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆஸ்திரேலிய ராணுவத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவர்.

தனிப்பட்ட விவரங்களை அலசி ஆராய்ந்த பிறகு, அதில் பிரச்சினை ஏதும் இல்லை என்றால் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆஸ்திரேலிய ராணுவத்தில் சேரலாம். அதுமட்டுமல்லாது, அவர்கள் ஆஸ்திரேலியாவில் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு வசித்திருக்க வேண்டும் என்று ஜூன் மாதம் 4ஆம் திகதியன்று தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்‌திரேலிய ராணுவத்தில் சேருவதற்கு முன்பு அவர்கள் அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் வேறு நாடுகளின் ராணுவத்தில் சேவையாற்றியிருக்கக்கூடாது.

ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 358 அதிகரித்து 58,600ஆகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய ராணுவம் கொண்டிருந்த இலக்கைவிட இது 5,000 குறைவு.

Exit mobile version