Site icon Tamil News

மாங்குளம் இராணுவ முகாமில் பணியாற்றிய சிப்பாய் கைது

மாங்குளம் இராணுவ முகாமின் லயன் ரெஜிமெண்டில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர் மஹவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ சேமிப்புக் கணக்கில் இருந்து 37 இலட்சத்து 72,800 ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

மாங்குளம் இராணுவ முகாம் வழங்கிய தகவலுக்கு அமைய, மஹவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாங்குளம் இராணுவ முகாமின் சேமிப்புக் கணக்குப் பிரிவில் பணிபுரிந்த போதே இந்த பண மோசடி இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மாங்குளம் இராணுவ முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளார்.

Exit mobile version