Site icon Tamil News

யாழில் இட ஒதுக்கீடு கோரி பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்துள்ள சிறு வர்த்தகர்கள்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபரிகள் தமக்கு நல்லதொரு இடத்தினை ஒதுக்கி தருமாறு கேரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி சந்தையில் நீண்டகாலமாக சிறு பொருட்களை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் , பிரதேச சபையினால் சந்தைக்குள் வேறு இடம் ஒன்று வியாபர நடவடிக்கைக்காக ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னர் பிரதான வாயிலுக்கு அருகில் அவர்கள் வியாபாரம் செய்து வந்த வேளை , சந்தைக்கு வந்து செல்வோர் அவர்களிடம் பொருட்களை வாங்கி செல்ல இலகுவாக இருந்தது.

தற்போது ,அவர்கள் முன்னர் வியாபாரம் செய்த இடங்கள் வாகன தரிப்பிட பகுதியாகவும் , சந்தையில் இருந்து பொருட்களை ஏற்றி இறக்கும் வாகன தரிப்பிடமாகவும் மாற்றப்பட்டுள்ளது.அந்த பகுதியில் வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு சந்தைக்குள் பிறிதொரு இடத்தினை பிரதேச சபை ஒதுக்கி கொடுத்துள்ளது.

புதிதாக ஒதுக்கி கொடுக்கப்பட்ட இடமானது , சந்தையின் ஒதுக்கு புறமான பகுதி, அங்கு தமக்கு வியாபாரம் நடைபெறவில்லை. இட வாடகையாக முன்னர் 80 ரூபாய் வாங்கியவர்கள் தற்போது 150 ரூபாய் வாங்குகின்றார்கள். மின்சார வசதிகள் கூட செய்து தரவில்லை. எமது வியாபர நடவடிக்கைக்காக சந்தைக்குள் நல்லதொரு இடத்தினை ஒதுக்கி தர பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

Exit mobile version