Site icon Tamil News

SLvsENG Test – இலங்கையை விட 23 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி

ஓல்ட் ட்ராஃபோர்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இலங்கையை விட இங்கிலாந்து 23 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோரின் அரை சதங்கள் இங்கிலாந்து அணியை இரண்டாம் நாள் முடிவில் 259-6 என்ற நிலைக்கு அழைத்துச் சென்றது.

இங்கிலாந்து அணி சார்பில் புரூக் 56 ஓட்டங்களுக்கும் ஜோ ரூட் 42 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்,மேலும் ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணி விக்கெட் காப்பாளர் ஸ்மித் 72 ஓட்டங்களுடன் உள்ளார்.

இலங்கை அணி சார்பில் இரண்டாம் நாள் முடிவில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்களும் , ஜெயசூர்யா 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

மேலும் மோசமான காலநிலை காரணமாக 22 ஓவர்கள் பயன்படுத்தப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.

அதே நேரத்தில் போட்டியின் இறுதி மூன்று நாட்களில் மோசமான வானிலை அச்சுறுத்தல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version