கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல் ; 6 பொலிஸ் அதிகாரிகள் கைது

கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் ஆறு அதிகாரிகள், கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கிிரிந்திவிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதிரியாரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டபோது ஏற்பட்ட தர்க்கம், இந்தத் தாக்குதலில் முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த பாதிரியார் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.