Site icon Tamil News

உலகின் அறிவார்ந்த நகரங்களில் சிங்கப்பூருக்கு கிடைத்த இடம்

உலகின் அறிவார்ந்த நகரங்களில் சிங்கப்பூருக்கு ஐந்தாம் இடம் கிடைத்துள்ளது.

குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நகரங்கள் எவ்வாறு தொழில்நுட்பத்தைச் சிறப்பாகக் கையாள்கின்றன என்ற ஆய்வில் சிங்கப்பூர் ஐந்தாம் இடத்தில் வந்திருக்கிறது.

IMD உலகப் போட்டித்தன்மை நிலையத்தின் ஆக அண்மைய அறிவார்ந்த நகரக் குறியீட்டில் சிங்கப்பூர் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.

மற்ற ஆசிய நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது.

உள்கட்டமைப்பையும் தொழில்நுட்பத்தையும் நகரங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு கணக்கிடுகிறது.

முன்னேற்றம், வெளிப்படைத்தன்மை, புத்தாக்கம் ஆகியவற்றுக்குத் தரநிலையாகவும் அது விளங்குகிறது.

உலகம் முழுதும் உள்ள 142 நகரங்களில் கிடைத்த விவரங்களும் குடியிருப்பாளர்களிடம் நடத்திய ஆய்வுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

Exit mobile version