Site icon Tamil News

உலகளவில் மீண்டும் முதல் இடம் பிடித்த சிங்கப்பூர்

உலக நாடுகளுக்கு மத்தியில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அரசாங்கத்தின் செயலாற்றலை மதிப்பிடும் பட்டியலில் இவ்வாறு சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

இலாப நோக்கமில்லாத அமைப்பான Chandler Institute of Governance 100க்கும் அதிகமான நாடுகளின் அரசாங்கங்களை மதிப்பீடு செய்து அந்த முடிவுகளை வெளியிட்டது.

தொலைநோக்குச் சிந்தனை கொண்ட தலைவர்களைக் கொண்டிருப்பது, மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அமைத்துக் கொடுப்பதோடு, புத்தாக்கத்திறனை வளர்ப்பது
நாட்டின் நிதியிருப்பை ஒழுங்காகக் கையாள்வதுஈ ஆகியவை சிங்கப்பூர் முதலாம் இடத்தைப் பிடிக்கக் கைகொடுத்தன.

அந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில், சிங்கப்பூர், டென்மார்க், பின்லாந்து, சுவிட்ஸர்லந்து, நோர்வே, சுவீடன், லக்ஸம்பர்க், ஜெர்மனி, நெதர்லந்து, அயர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளது.

Exit mobile version