Site icon Tamil News

ஆசியாவின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை பெற்ற சிங்கப்பூர்

ஆசியாவின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூர் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான (World Happiness) நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலகளவில் கணக்கெடுக்கப்பட்ட 143 இடங்களில் சிங்கப்பூர் 30வது இடத்தை பிடித்தது. ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது ஐந்து தரவரிசைகள் குறைவாக சிங்கப்பூர் பெற்றுள்ளது.

தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், டென்மார்க் மற்றும் ஐலாந்தும் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு வலையமைப்பு, ஆரோக்கியமான ஆயுட்காலம், வாழ்க்கைத் தேர்வுகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் சுதந்திரம், தொண்டுழிய நன்கொடைகள் மற்றும் ஊழல் பற்றிய புலனுணர்வு ஆகிய ஆறு காரணிகளின்படி மகிழ்ச்சியான நாடுகள் மதிப்பிடப்பட்டன.

ஆசியாவின் முதல் 10 இடத்தை பிடித்த மகிழ்ச்சியான நாடுகள்

சிங்கப்பூர்
தைவான்
ஜப்பான்
தென் கொரியா
பிலிப்பைன்ஸ்
வியட்நாம்
தாய்லாந்து
மலேசியா
சீனா
மங்கோலியா
உலகளவில் தரவரிசை
பின்லாந்து (7.741)
டென்மார்க் (7.583)
ஐஸ்லாந்து (7.525)
ஸ்வீடன் (7.344)
இஸ்ரேல் (7.341)
நெதர்லாந்து (7.319)
நோர்வே (7.302)
லக்சம்பர்க் (7.122)
சுவிட்சர்லாந்து (7.060)
ஆஸ்திரேலியா (7.057)

இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியா 126 வது இடத்தை பிடித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version