பொழுதுபோக்கு

சிம்புவுக்கு திருமணமா? இதுக்கு இல்லையா ஒரு எண்டு

தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது என பல ஜானர்களில் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் தக் லைஃப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துவரும் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார்.

இப்படி சினிமாவில் பயங்கர பிஸியாக சிம்பு இருந்தாலும் அவரது ரசிகர்களுக்கு ஒரு சின்ன குறை இருக்கிறது.

நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி ஆகிய இருவருடனும் இருந்த சிம்புவின் காதல் பிரேக் அப்பில் முடிந்தது. காதல்கள் பிரேக் அப் ஆனாலும் சிம்பு விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பது ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது.

சிம்புவோ அதுகுறித்து எந்தவிதமான ரியாக்‌ஷனும் கொடுப்பதில்லை.

ஆனால் அவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் இப்போது மீண்டும் அதுமாதிரியான தகவல் பரவிவருகிறது.

அதாவது ஈஸ்வரன் படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோயின் நிதி அகர்வாலுடன் சிம்புவுக்கு காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது வெறும் கிசுகிசுதான் என்பதை காலம் உணர்த்தியது. சூழல் இப்படி இருக்க, சிம்புவுக்கும் நிதி அகர்வாலுக்கும் விரைவில் திருமணம் என்று மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆகமொத்தம் சிம்புவின் திருமணத்தில் அவரைவிடவும் மற்றவர்களுக்கு அதீத அக்கறை இருப்பது புரிகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content