Tamil News

சிம்பு நடிகைகளை ஏமாற்றினாரா? உண்மையை உடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிம்பு. இவர் தற்போது தக் லைப், எஸ்.டி.ஆர் 48 ஆகிய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

எஸ்.டி.ஆர், அட் மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் நடிப்பு மட்டுமின்றி இயக்கம், இசை, பாடல்கள் எழுதுவது, பாடுவது என பல ஜானர்களில் தனது திறமையை நிரூபித்தவர்.

சிம்புவை பொறுத்தவரை ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தவர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒழுங்காக வரமாட்டார் என்று ஆரம்பித்து, காதல் தோல்வி என அவர் மீது பல சர்ச்சைகள் இருந்தன.ஆனால் அத்தனைக்கும் சிம்பு அமைதி மட்டுமே காத்திருந்தார். அதனாலேயே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியது.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா சிம்பு குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

சிம்பு திறமையான நடிகர் எனவும். அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் எனவும் சிம்புவிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளாம். ஆனால் ஒன்று சிம்புவைத்தான் நடிகைகள் ஏமாற்றியிருக்கிறார்களே ஒழிய சிம்பு யாரையும் ஏமாற்றவில்லை.

இதுவரை ஒரு நடிகைக்கூட சிம்பு என்னை ஏமாற்றிவிட்டார் என்று புகார் சொன்னதே இல்லை எனவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும், ஒரு நடிகனாக சிம்புவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். தக் லைஃப் படத்தில் அவருக்கு பெரிய ரோல் கொடுத்திருக்கிறார்கள் என்றும் சேகுவேரா கூறியுள்ளார்.

Exit mobile version