Tamil News

கோட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? ஐயோ மிஸ் பண்ணிட்டாரே…

சமீபத்தில் வெளியான கோட் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த டயலாக் தான் பேசு பொருளாக மாறியது.

அதாவது விஜய் 69 படத்திற்கு பிறகு அரசியலுக்கு செல்ல உள்ளார். இதனால் சினிமாவை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைத்து விட்டு அரசியலுக்கு செல்கிறார் என்பது போல தான் காட்சி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக கேமியோவில் நடிக்க இருந்ததே வேறு ஒரு நடிகர் தான். அதாவது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிம்புவை நடிக்க வைக்கலாம் என்று வெங்கட் பிரபு முடிவு செய்திருந்தார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் மாநாடு படம் வெளியாகி இருந்தது.

அதோடு விஜய்யின் லியோ படத்திலும் சிம்பு ஒரு பாடல் பாடி இருந்தார். மாநாடு படத்தின் தொடர்ச்சியாக அந்த காட்சியை வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்திருந்த நிலையில் சிம்பு இப்போது சில படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு சரியான நேரம் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருந்தது. இதன் காரணமாக சிம்புவுக்கு அந்த வாய்ப்பு கைநழுவி போன நிலையில் சிவகார்த்திகேயன் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார். கோட் போனாலும் சிம்பு தமிழில் தக் லைஃப் படத்தில் பக்கா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Exit mobile version