Tamil News

Thug Life ; கமலுடன் இணையும் சிம்பு… சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல், இயக்குனர் மணி ரத்னம் இணையும் படம் ‘தக் லைப்’. இப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றனர். படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன.

படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதால், கமல் இல்லாத காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது.

படத்தில் நடிகர் கமல் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியானது.

‘தக் லைப்’ படத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிப்பதற்கு படக்குழு வேறு நடிகர்களை தேடி வந்தது.

இந்நிலையில் சிம்பு, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக இருப்பதால் அவரிடம் படக்குழு பேசி வருகிறது.

விரைவில் ‘தக் லைப்’ படத்தில் கமலுடன், நடிகர் சிம்பு இணைந்து நடிக்க உள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் சிம்பு விரைவில் கையெழுத்திட உள்ளார்.

இதேவேளை, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிம்பு தனது 48ஆவது படத்தில் நடிக்கின்றார். இதில் இரட்டை வேடத்தில் கமல் நடிக்கின்றார். இதற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாத நிலையில், பல வதந்திகள் வெளிவந்தன.

இதை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் சிம்பு கமலுடன் கூட்டணியமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version