Site icon Tamil News

பிரான்ஸில் அகதிகளிடம் பரவும் ஆபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

பிரான்ஸில் 200,000 பேர் HIV வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களில் 24,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு அவர்களது உடல் நிலை குறித்த விழிப்புணர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதேவேளை வீடற்றவர்கள் மற்றும் அகதிகளிடம் இந்த HIV பரவல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் 10 பேரில் 4 பேர் தாமதமாக தங்களது உடல்நிலமைகளை பரிசோதனை செய்துகொள்வதாகவும், இதனால் ஆரம்பகால சிகிச்சைகளை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களது உடலினை பரிசோதனை செய்வது மிகவும் குறைந்துள்ளது.

அகதிகள் பலரிடமும் HIV வைரஸ் பரவல் இருப்பதை அவதானிக்கிறோம். பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் அகதிகள் மிக எளிதில் HIV தொற்றுக்கு உள்ளாகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version