Site icon Tamil News

சிங்கப்பூரில் 20 வயதுடைய யுவதியின் அதிர்ச்சி செயல் – 5 கார்கள் திருட்டு

சிங்கப்பூரில் 4 பேருடன் இணைந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் 5 கார்களைத் திருடியுள்ளார்.

குறித்த யுவதிகக்கு 18 மாதங்கள் நன்னடத்தை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் நூர் அமிரா முகமது பௌசிக்கு என்ற குறித்த பெண்ணுக்கு 18 வயதாகும்.

நன்னடத்தை உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அமிரா இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். 60 மணி நேரத்திற்கு அவர் சமூகச் சேவை செய்ய வேண்டும்.

2022ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி அமிராவுடன் குற்றம் புரிந்த மூவர் மதுபானக்கூடத்தில் கார்களைத் திருடத் திட்டமிட்டனர். பிறகு அமிரா வந்தவுடன் அவர்கள் திட்டத்தைப் பற்றி பகிர்ந்தனர்.

பிறகு அவர்கள் நால்வரும் தாய் செங்கில் (Tai Seng) உள்ள கார் நிறுவனத்திற்குச் சென்றனர். அங்கு 2 கார்கள் பூட்டப்படாததைக் கண்டுபிடித்தவுடன் அவர்கள் கார்களை ஓட்டிச் சென்றனர்.

2 ஆடவர்கள் அதைச் செய்யும்போது அமிராவும் மற்றொருவரும் யாராவது வருகிறார்களா என்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் அவர்கள் இன்னும் 3 கார்களைத் திருடினர். அவற்றின் மொத்த மதிப்பு 152,500 வெள்ளியாகும்.

பிறகு மே 27ஆம் திகதி வாடிக்கையாளரின் கார் களவாடப்பட்டுள்ளது. அமிராவுடன் குற்றம் புரிந்த ஐந்தாவது நபர் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கபடவில்லை.

Exit mobile version