Tamil News

நம்ம சங்கர் படத்துக்கு இவ்வளோ மவுசா?? ஓடிடி உரிமை யாருக்கு தெரியுமா?

திரைப்படங்களின் முக்கியமான வருவாயாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை இருந்து வந்த நிலையில், டிஜிட்டல், ஓடிடி உரிமைகள் என வந்த பிறகு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையின் மதிப்பு மங்கத் தொடங்கியது.

பிரபல ஓடிடி நிறுவனங்கள் முன்பு அனைத்துப் படங்களையும் போட்டிப் போட்டு வாங்கின. பெரிய படங்களை கோடிகள் கொட்டி வாங்குகிறவர்கள், சின்னப் படங்கள், அறிமுகமில்லாதவர்களின் படங்களை வாங்குவதில்லை.

மாஸ் நடிகர்களின் படங்கள் என்றால், அவை வெளியாகும் முன்பே திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்பான ஓடிடி உரிமை வாங்கப்பட்டுவிடும்.

ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் கேம் சேஞ்சர் படம் இந்த வருடம் வெளியாகிறது. ராம் சரண் இதில் நடித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி எப்படி அரசியல் அராஜகங்களை எதிர்த்து, தேர்தலை ஒழுங்குப்படுத்தி நல்லாட்சிக்கு வழிவகுக்கிறார் என்பதை மையப்படுத்தி இந்தப் படத்தை ஷங்கர் எடுத்துள்ளார்.

ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்பான ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது.

இந்தி தவிர்த்து தென்னிந்திய மொழிகளுக்கு மட்டுமான ஓடிடி உரிமைக்கு 150 கோடிகள் அந்நிறுவனம் கொடுத்துள்ளது. ராஜமௌலியின் படம் தவிர எந்தப் படத்துக்கும் இத்தனை அதிகத் தொகை கிடைத்ததில்லை என்கிறார்கள்.

தில் ராஜு தயாரித்துவரும் கேம் சேஞ்சருக்கு தமன் இசையமைக்கிறார். மார்ச் 27 ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலை வெளியிடுகின்றனர். விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை எதிர்பார்க்கலாம்..

Exit mobile version