Tamil News

புதிய பாராளுமன்றத்தை அழகிய வீடு என்றார் ஷாருக்கான்!! மோடி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

இந்தியாவில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தொகுதி இன்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிடத்தை திறந்ததும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை, பூஜை செய்து ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தனர். அந்த செங்கோலை கையில் ஏந்தியபடி நடந்து சென்ற பிரதமர் மோடி, சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் அதனை நிறுவினார். இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்டார். அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து பிரபலங்கள் பலரும் பேசி உள்ளனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை அழகை விவரிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில், நமது அரசியலமைப்பை நிலைநிறுத்தும் மக்களுக்கு என்ன ஒரு அற்புதமான புதிய வீடு இது. இந்த மகத்தான தேசத்தில் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்தி, மக்களின் பன்முகத்தன்மையை பாதுகாக்கிறது மோடி ஜி. இது புதிய இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடமாக இருந்தாலும், இந்தியாவின் மகிமை என்கிற பழைய கனவை சுமந்துகொண்டிருக்கிறது. ஜெய் ஹிந்த்” என பதிவிட்டுள்ளார். ஷாருக்கானின் இந்த டுவிட்டிற்கு பிரதமர் மோடி ரிப்ளை செய்துள்ளார். இதுகுறித்து மோடி பதிவிட்டுள்ள ரிப்ளை டுவிட்டில், “அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது! புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனநாயக வலிமை மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாகும். இதில் பாரம்பரியத்துடன் நவீனமும் கலந்திருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.  

Exit mobile version