Site icon Tamil News

சுவிஸில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு: வெளியான முக்கிய தகவல்!

சுவிட்சர்லாந்தில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கொரோனா தொடர்பில் முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன.

சுவிஸ் நகரங்களில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சில பகுதிகளில் மறைவான கொரோனா அலை ஒன்று பரவிவருவதாக தெரிவித்துள்ளன.

கழிவுநீரில் காணப்படும் கொரோனா வைரஸின் அளவு, 2022 கோடை மற்றும் கடந்த இலையுதிர்காலத்தில் காணப்பட்டதைவிட அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும், Aargau மகாணம்தான் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் தற்போது கொரோனா பரிசோதனையே அபூர்வமாகிவிட்டதால், எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் குறித்த மிகச்சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version