Site icon Tamil News

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் இட நெருக்கடி!! ஷிப்ட் முறையில் தூங்கும் கைதிகள்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 300% அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 36 சிறைச்சாலைகள் உள்ளன, அவற்றில் தங்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 12,000 ஐ நெருங்குகிறது.

எனினும் சிறைச்சாலைகளில் 31,000க்கும் அதிகமான கைதிகள் இருப்பதாக சிறைத் திணைக்களம் கூறுகிறது.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 670 கைதிகள் அடைக்கப்படலாம் எனவும், 2000க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் சுமார் 300 கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 2000க்கும் அதிகமாகும்.

தற்போது மஹர சிறைச்சாலையில் சுமார் 670 கைதிகளுக்கான வசதிகள் உள்ளன, ஆனால் 2500க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 270 கைதிகளை அடைக்கக்கூடிய காலி சிறைச்சாலையில் சுமார் 1100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் கூறுகிறது.

இந்நிலைமையால் பல சிறைச்சாலைகளில் சந்தேகநபர்கள் மாறி மாறி உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய சிறைச்சாலைகளிலும் இந்த நிலை தோன்றியமையால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதனால் அவர்கள் தற்போது பணியிலிருந்து விலகிச் செல்வதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version