Site icon Tamil News

மா ஓயாவில் உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

நேற்று (27) மா ஓயாவில் நீராடச் சென்ற வேளையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு பாடசாலை மாணவர்களின் சடலங்களும் இன்று (28) பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சடலங்கள் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

பாடசாலை முடிந்ததும், 11 மாணவர்கள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, பின்னர் நீராடச் சென்ற போது, ​​இந்த விபத்தை எதிர்கொண்டனர்.

பொல்கஹவெல புனித பெர்னாடெட் கல்லூரியின் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவர்கள் குழுவொன்றே இவ்விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய மாணவர்கள் அலவ்வ மற்றும் பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

அலவ்வ கீழ் வலகும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 14 வயதுடைய கலன லக்ஷித அமரசிங்க இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இளைய சகோதரியும் உள்ளார்.

15 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய விடாஸ் தேவிமினட் குடும்பத்தில் மூத்த குழந்தை மற்றும் ஒரு இளைய சகோதரரும் உள்ளார்.

கவீன் தேனுர பொல்கஹவெல மடலந்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையும் ஆவார்.

பொல்கஹவெல பிடிவில்ல தலவத்தேகெதர பகுதியைச் சேர்ந்த ரவிது ரன்மின இரண்டு ஆண் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாவார்.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்களின் பிரேதப் பரிசோதனை இன்று பிற்பகல் பொல்கஹவெல வைத்தியசாலையில் இடம்பெற்றது.

Exit mobile version