Site icon Tamil News

அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளின் விபரங்களை வெளியிட்ட சேவாக்..!

2023 ஐசிசி உலகக்கோப்பை நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் இந்த இரு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கிரிக்பஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023  தொடங்கவுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இன்றுமுதல் போட்டியில் மோத உள்ளன. இந்நிலையில், வீரேந்திர சேவாக் கிரிக்பஸ்க்கு அளித்த பேட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம்பெறும் என்றார். சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து சிறப்பாக விளையாடி வருகிறது. உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவில்லை என்றால் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான் என்று இரு அணியை தேர்ந்தடுத்திருக்க மாட்டேன். ஒரே ஒரு அணியைத் தேர்ந்தெடுத்திருப்பேன் என தெரிவித்தார்.

உலகக் கோப்பையை வெல்லும் திறன் கொண்ட வலுவான அணியை இந்தியா கொண்டுள்ளது என்றும், 2011 ஆம் ஆண்டு மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. தற்போது அணியில் மூத்த வீரர்களாக உள்ள ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கும் அதையே இந்திய அணி செய்ய வேண்டும் என்று கூறினார். சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி உலககோப்பையாக இருந்தது.

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சச்சினுடன் சேர்ந்து சக வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் வீச முடியாவிட்டால் ஆடும் லெவனில் மற்றொரு பந்து வீச்சாளரைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆடும் லெவனில் சூர்யகுமாரை விட இஷான் கிஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும், ஏனெனில் இஷான்கிஷன் தான் சரியான வீரர் என்றார். மேலும் ராகுலை ஐந்தாவது இடத்தில், ஹர்திக் பாண்டியாவை ஆறாவது இடத்தில் விளையாடலாம் என கூறினார்.

இந்திய அணி தங்கள் முதல் உலகக்கோப்பை போட்டியை வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதவுள்ளது.

Exit mobile version